நடிக்க வந்து இயக்குனர்களான பாரதிராஜா, பாலசந்தர் இருவருமே தனித்தனியாக நடித்திருக்கிறார்கள்.
ஆனால் இந்த இரண்டு பேரையும் சேர்த்து ஒரே படத்தில் நடிக்க வைக்கப்போகிறார் ஒருத்தர்.
பாலசந்தரிடம் உதவியாளராக இருந்த தாமிரா என்ற இளைஞர்தான் அந்தப்படத்துக்கு இயக்குனர்.
இரண்டு பேரிடமும் கதை சொல்லியிருக்கிறார். இரண்டு பேருக்குமே கதை பிடித்துவிட்டது.
நடிப்பதற்கும் சம்மதம் தெரிவித்து விட்டார்கள். படத்தை தயாரிக்கப்போவது யாரென்பதுதான் இன்னும் முடிவாகவில்லை.
அது உறுதி செய்யப்பட்டபிறகு முறையாக அறிவிப்பு செய்ய இருக்கிறார்களாம்!