Publish Date: Fri, 14 Dec 2007 (12:17 IST)
Updated Date: Fri, 14 Dec 2007 (12:16 IST)
இப்போதுள்ள ஹீரோயின்களில் மிகவும் அதிர்ஷடசாலி யாரென்று கேட்டால்...யோசிக்கவே தேவையில்லை நயன்தாரா என்று சத்தியம் பண்ணி சொல்லலாம்.
சரத்குமாரோடு அறிமுகமாகி சூப்பர் ஸ்டாரோடு ஒரு படம் அப்படியே சரக்கென்று இளம் ஹீரோக்களோடு ஜோடி சேர்ந்து தமிழ்,தெலுங்கு இரண்டிலும் கலக்கிகொண்டிருக்கிறார்.
ஏற்கனவே சிவகாசி படத்தில் கோடம்பாக்கம் ஏரியா போட்டிக்குதான் வாறியா என்று விஜயோடு ஆட்டம் போட்டிருந்தாலும் இன்னும் ஜோடியாக ஒரு படம்கூட நடிக்கவில்லை.
அஜித்தோடு நடித்திருக்கிற பில்லாவில் அதிரடியாக கலக்கியிருக்கிறார் என்று ஊரெல்லாம் நயன்தாரா புகழ்பாட...குருவி படத்தை அடுத்து பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படத்துக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.