உயிர் படத்தை இயக்கிய சாமி இரண்டாவதாக இயக்கியுள்ள படம் மிருகம்.
ஆதி, பத்மபிரியா, கஞ்சா கருப்பு நடித்திருக்கும் இந்தப்படம் பதினாலாம் தேதி ரிலீஸ் பண்ணுவதென்று முடிவெடுத்து சென்ஸாருக்கு படத்தை போட்டுக்காட்டினார்கள்.
படத்தை பார்த்துவிட்டு யு.ஏ சர்டிபிகேட் கொடுப்பதாகச் சொல்ல.. அதற்கும் சரி என்று சொல்லிவிட்டார்கள் இயக்குனரும் தயாரிப்பாளரும்.
கடைசி நேரத்தில் மிருகவதை தடுப்பு ஆட்கள் படத்தில் ஆட்சேபகரமான காட்சிகள் இருப்பதாக சொல்லி படத்தை ரிலீஸ் பண்ணுவதற்கு எதிர்ப்பு காட்டினார்கள்.
சம்பந்தப்பட்ட ஆட்களுக்கு படத்தை போட்டுக்காட்டி கதைக்கு எவ்வளவு முக்கியமான காட்சிகள் என்பதை விளக்கி சொன்னபிறகு தடையை நீக்கிவிட்டது மிருகவதை தடுப்பு அமைப்பு!