Entertainment Film Featuresorarticles 0712 13 1071213016_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌கிர‌‌ங்கடி‌க்க வரு‌கிறது சிலம்பாட்டம்

Advertiesment
‌கிர‌‌ங்கடி‌க்க வரு‌கிறது சிலம்பாட்டம்
, வியாழன், 13 டிசம்பர் 2007 (12:24 IST)
மாபெரு‌ம் வெ‌ற்‌றி‌ப் பட‌ங்களை‌த் தயா‌ரி‌த்த லஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் 25வது படம் 'சிலம்பாட்டம்'. இ‌ந்த‌ப் பட‌த்‌தி‌ல் ‌மிக வித்தியாசமான வேடத்தில் கோயில் அர்ச்சகராக சிலம்பரசன் நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று மூன்று மொழிகளில் 30-க்கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த எஸ். சரவணன் முதல்முறையாக கதை, திரைக்கதை, வசனம் எழுதி இ‌ப்பட‌த்‌தி‌ன் மூல‌ம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

தமிழகத்தின் வீர விளையாட்டு சிலம்பாட்டம். சிலம்பரசனின் இன்னொரு பரிமாணத்தில் இந்த ஆட்டம் கலங்கடிக்கும். இது ஒரு மிக பிரமாண்டமான படமாக அமையும் என்றார் இயக்குனர்.

இதன் படப்பிடிப்பு கட‌ந்த 7-ம் தேதி சென்னையில் ஆரம்பமாகி தொடர்ந்து கும்பகோணம், திருவையாறு, திருநெல்வேலி, தென்காசி, விசாகப்பட்டணம், ராஜமுந்திரி, ஹைதராபாத் போன்ற இடங்களில் நடைபெற்று வருகிறது.

இ‌ந்த பட‌த்‌தி‌ல் சிலம்பரசனு‌க்கு ஜோடிகளாக இரண்டு மும்பை மாடல்கள் அறிமுகமாகிறார்கள். மேலும் சந்தானம், கஞ்சா கருப்பு, கருணாஸ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இசை - தினா
ஒளிப்பதிவு - மதி.ஆர்
எடிட்டிங் - டான்மேக்ஸ்
கலை - வி. பிரபாகர்
ஸ்டண்ட் - கனல்கண்ணன்
தயாரிப்பு மேற்பார்வை - பி.எஸ். ராஜேந்திரன்
தயாரிப்பு - லஷ்மி மூவி மேக்கர்ஸ்

Share this Story:

Follow Webdunia tamil