Publish Date: Thu, 13 Dec 2007 (14:48 IST)
Updated Date: Thu, 13 Dec 2007 (14:47 IST)
தெலுங்கு ராஜேந்திர பிரசாத் ஹீரோவாக நடிக்கும் ஆங்கிலப்படம் குயிக் ஹன் முருகன்.
சஷான் கோஷ் இயக்கும் இந்தப்படத்தில் நாசர்,சண்முகராஜன்,ரம்பா,ராஜு சுந்தரம் தொடங்கி இந்திய மொழியில் உள்ள பிரபலங்கள் ஏகப்பட்டபேர் நடிக்கிறார்கள்.
ஆங்கிலம்தான் படத்துக்கான மொழி என்றாலும் பாதி இடத்தில் தமிழ் மொழி பேசியிருக்கிறார்கள்.
கௌபாய் ஸ்டைல் காமெடி ஆக்ஷன் படம். வருகிற ஜனவரி மாதம் உலகம் முழுக்க ரிலீஸாகப்போகிறது.
இதன் வெளிநாட்டு உரிமை மட்டும் பதினைந்து கோடிக்கு போயிருக்கிறதாம்.
இதை தமிழில் வாங்கி ரிலீஸ் பண்ண பெரிய தலைகள் பலபேர் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.