இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் என் உயிர் தோழன் படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்தவர் தென்னவன்.
அந்தப்படம் ரிலீஸானபோது கிட்டத்தட்ட இருபது படங்களுக்கு மேல் ஹீரோவாக ஒப்பந்தமானார்.
ஆனால் அவரது அடாவடியான நடவடிக்கைகளால் எல்லா வாய்ப்புகளும் கை நழுவிப்போய்விட்டன.
அதன்பிறகு ஆளே இல்லாமல் இருந்தார். நந்தா படத்தில் இயக்குனர் பாலா ஒரு கேரக்டர் கொடுத் ரீ எண்ட்ரீ கொடுத்தார்.
தொடந்து சண்டைக்கொழி மாதிரி படங்களில் கேர்க்டர் ஆர்ட்டிஸ்டாக நடித்த தென்னவன் அடுத்த மாதம் ஒரு படத்துக்கு இயக்குனராகப் போகிறார்.
படத்துக்கு பேர் என்ன தெரியுமா? முட்டம். அவர் முதன்முதலாக கமெரா முன்னாடி நின்ற இடமாம்.