வழக்கமாக தன் படம் ரிலீஸாகும்போது தயாரிப்பாளர் தரப்பில் பிரச்சினை என்றால் கடைசி நேரத்தில் அஜித் தனது சொந்தப் பணத்தை செலவு செய்து படம் வெளிவர உதவுவார்.
அதேபோல் சமீபத்தில் வெளியான அழகிய தமிழ்மகன் படத்துக்கு விஜய் கிட்டத்தட்ட ஒரு கோடியே அறுபது லட்சம் கொடுத்தார்.
நேற்று ரிலீஸான ஓரம்போ படத்துக்காக தன் கயிலிருந்து சுமார் ஒரு கோடியே நாற்பது லட்சம் கொடுத்திருக்கிறார் ஆர்யா.
அதுவும் தனக்கு நெருக்கமான நண்பர்கள் அத்தனை பேரிடமும் கடன் வாங்கி படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார்.