அஜித் நடித்துள்ள பில்லா படம் விரைவில் ரிலீஸாகப்போகிறது. இதை அடுத் வருகிற ஜனவரி மாதம் ஐங்கரன் பிலிம்ஸ் லண்டன் கருணாஸ் தயாரிப்பில் ராஜுசுந்தரம் இயக்கத்தில் அக்பர் படத்தில் நடிக்கப்போகிறார்.
அதனைத் தொடர்ந்து அவரை வைத்து படம் தயாரிக்க ஏகப்பட்ட கம்பெனிகள் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
கால்ஷீட்டுக்காக அஜித்தை நெருங்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அடுத்த நன்றி கடனுக்காக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்பது தெரிந்ததும் கே.எஸ்.ரவிக்குமார் வீட்டுக்கு படையெடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.
இருங்கப்பா..முதல்ல தசாவதாரம் படத்திலிருந்து வெளியில் வந்துக்கிறேன்...
அப்புறம் பேசலாம் என்று எல்லாரையும் திருப்பி அனுப்பிவிட்டார் இயக்குனர்.
அதுவும் சரிதான்!