ஒன்பது ரூபாய் நோட்டு படம் பெரிய அளவில் பேசப்படும் என்று ரொம்பவும் நம்பினார் இயக்குனர் தங்கர் பச்சான்.
ஆனால் படம் நல்லா இருக்கு என்று பேசப்படுகிற அளவுக்கு வியாபார ரீதியில் வசூலாகவில்ல.
ஆனாலும் அவர் சோர்ந்து போகாமல் அடுத்த படத்துக்கு ரெடியாகிவிட்டார். படத்துக்கு பேர் தாய்மண்.
சிதம்பரத்தில் அப்பாசாமி முடிந்ததும் இதைத்தான் எடுப்பதாக இருந்தார். ஆனால் முழு படமும் லண்டனில் நடக்கிற கதை.
செலவும் அதிகம் என்பதால் தள்ளிப்போட்டிருந்தார். இப்போது எல்லாம் பக்காவாக ரெடியாகிவிட்டது.
ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்குகிறார்.யார் நடிகர்கள் என்பதை அப்போதான் சொல்லுவாராம்!