நடிகராக, பாடகராக மட்டுமே அதகளம் பண்ணிக்கொண்டிருந்த வெங்கட்பிரபு, சென்னை 28 படத்தின் மூலமாக கவனிக்கப்படும் இயக்குனர்கள் வரிசைக்கு வந்துவிட்டார்.
அந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது படத்துக்கு அஜித் தொடங்கி எல்லா ஹீரோக்களுமே வெங்கட்டோடு படம் பண்ணலாம் என்று தங்கள் ஆசையை சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால் அத்தனைபேரும் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை முடித்துவிட்டு அடுத்து பண்ணலாம் என்றிருக்கிறார்கள்.
அவ்வளவு நாள் காத்திருந்தால் வேலைக்கு ஆகாது என்று சரோஜா என்று புது படத்தை தொடங்கிவிட்டார். அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிக்கும் இந்தப் படத்துக்கான பூஜை கடந்த 5ம் தேதி க்ரீன்பார்க் ஹோட்டலில் நடந்தது.
அதற்கான அழைப்பிதழை காலண்டர் வடிவில் அடித்து கொடுத்திருந்தார்கள். அதில்..காலண்டர் தேதிகளில் சரோஜா எத்தனை நாள் ஓடும் என்பதுவரை குறிப்பிட்டிருக்கிறார்கள்.
சொல்லி அடிக்கிறது இதுதானா!