சொல்ல மறந்த கதை படத்தின் மூலமாக நடிகராகவும் களம் இறங்கிய இயக்குனர் சேரன்... வழக்கமாக ஹீரோக்கள் செய்யும் எதையும் செய்யாமல் படு யதார்த்தமாக பக்கத்து வீட்டு இளைஞன் என்கிற மாதிரியான கேர்க்டர்களில்தான் வருவார்.
கரு. பழனியப்பன் இயக்கதில் நடிக்கும் பிரிவோம் சந்திப்போம் படமும் அந்த வகைதான். ஆனால் கூடுதலாக சினேகாவோடு ஏகப்பட்ட முத்தக் காட்சிகளில் நடித்திருக்கிறார்.
எனக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது என்று சொல்லியிருக்கிறார் சேரன். ஆனால் கதைக்கு அவசியம் என்பதால் இயக்குனரும் சினேகாவும் பேசி சம்மதிக்க வைத்தார்களாம்.