மிருகம் படத்தின் மொத்த ஏரியாவும் விற்றுவிட்டார்கள். படத்தின் மீதுள்ள நம்பிக்கையால் மதுரை, சென்னை சிட்டி உரிமையையும் மட்டும் தயாரிப்பாளரே வைத்திருக்கிறார்.
ஏற்கனவே இந்த ஏரியாவுக்கு விலை பேசியபோது புதுமுகம் நடித்த படம் இந்த விலைக்கு போகாது என்று மறுத்த விநியோகஸ்தர்கள் பலரும் இப்போது முட்டிமோதிக் கொண்டிருக்கிறார்கள்.
முக்கியமாக மதுரையை தன் கண்ட்ரோலில் வைத்திருக்கும் விநியோகஸ்தர் ஒருவர் ஏகப்பட்ட ஆட்கள் மூலம் விடாமல் முயற்சி செய்கிறார்.
கிடைக்குமா என்பதுதான் உறுதியாக தெரியவில்லை!