சிம்பு நடிக்க ஒளிப்பதிவாளர் சரவணம் இயக்கும் படமான சிலம்பாட்டம் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
ஏவி.எம் ஸ்டுடியோவில் படப்பிடிப்புக்கான தொடக்கவிழா நடக்கவிருக்கிறது. அதை தொடர்ந்து படப்பிடிப்பையும் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.
ஆனால் அவர்களுக்கு தேவை ஒரு பிரம்மாண்டமான தியேட்டர். படத்தில் ஹைலட்டாக அமையவிருக்கும் இந்தக் காட்சியில் ஏகப்பட்ட நடிகர்களும் தேவை.
அதற்காக சென்னையிலேயே ஒரு தியேட்டரை வாடகைக்கும் எடுக்க தேடிக்கொண்டிருக்கிறார்கள். எதுவும் இயக்குனர் எதிர்பார்த்த மாதிரி இல்லையாம்.
அதனால் விசாகப்பட்டணத்தில் போய் எடுக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.