இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் ஹீரோவாக நடித்ததிலிருந்து அதுபோல் பவர் ஃபுல்லான கேரக்டர்களில் நடிப்பதையே வடிவேலு அதிகம் விரும்புகிறார்.
அதன் தொடர்ச்சியாக தொடங்கி முடிக்கப்பட்ட படம்தான் இந்திரலோகத்தில் நா.அழகப்பன். இந்தப்படமும் முழுநீள காமெடிதான் என்றாலும் மக்களை நெகிழவைக்கும் விதமாக 90 வயது கிழவன் கேரக்டர் பண்ணியிருக்கிறார்.
முனிவர் ஒருவரின் சாபத்தால் கிழவனாகிறார் என்பதுபோல் காட்சி. சீர்காழி கோவிந்தராஜனின் பழைய பாடல் ஒன்று பின்னணியில் ஒலிக்க...சோகத்தோடு நடந்து வருகிற காட்சி...மிகப்பெரிய அளவில் பேசப்படுமாம்!