தென் இந்தியாவிலிருந்து போய் மும்பை சினிமா உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் ராம்கோபால் வர்மா.
இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் ஜெயித்திருக்கிறார். அப்படிப்பட்டவர் ஒரே ஒரு படம் ஆசைப்பட்டு ஷோலே படத்தை ரீ மேக் செய்தார்.
படம் சரியாக போகாததால் ஒட்டுமொத்த சினிமாக்காரர்களும் வர்மாவை காச்சி எடுத்திவிட்டார்கள்.
மீடியாவும் தன் பங்குக்கு கடுமையான விமர்சனத்தை வீசியிருந்தது. இதை உடைக்கும் வகையில் தமிழில் மார்க்கெட் இல்லாத ஒரு ஹீரோவை வைத்து படம் எடுக்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்.
ஹீரோ யார் தெரியுமா? சிபிராஜ்!
விரைவில் அதிரடியாக அறிவிப்பு வரவிருக்கிறது.