முந்திக் கொண்ட தாம்தூம் படம்
, திங்கள், 3 டிசம்பர் 2007 (12:48 IST)
ரீலிசாவதில் நீயா நானா என்று மோதிக் கொண்டிருந்த போட்டியில் சந்தோஷ் சுப்ரமணியத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு தாம்தூம் முந்திக் கொண்டது.
ஜெயம் ரவி நடிக்கும் தாம்தூம் மற்றும் சந்தோஷ் சுப்ரமணியம் இரண்டு படமும் ஒரே நேரத்தில் ரெடியாகி பொங்கலுக்கு வெளிவர தயாராக இருந்தது.
ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் முதலில் ஆரம்பிக்கப்பட்ட படம் தாம்தூம். அவர்
காலமானதால் படம் ரெடியாக கொஞ்சம் காலதாமதமானதும் அதற்குள் சந்தோஷ்சுப்ரமணியம் படம் ரெடியாகிவிட்டது.
ஆனால் தாம்தூம் படத்தைதான் முதலில் ரிலீஸ் செய்யவேண்டும். அதற்கு பின் ஆரம்பிக்கப்பட்ட சந்தோஷ் சுப்ரமணியம் படத்தை மார்ச் மாதத்திற்கு தள்ளி வைக்கவேண்டும் என்று தாம்தூம் தயாரிப்பு தரப்பில் கவுன்சிலில் புகார் செய்திருக்கிறார்கள்.
கவுன்சிலிலும் அதுதான் சரியென்று சொல்ல சந்தோஷ் சுப்ரமணியம் படத்தின் தயாரிப்பாளர் எடிட்டர் மோகன் அப்செட்டில் இருக்கிறாராம்.