வல்லமை தாராயோ படத்தை மமிதா என்கிற பெண் இயக்குனர் இயக்குகிறார். பார்த்திபன் சாயாசிங் நடிக்கும் இந்தப் படத்தின் தொடக்கவிழா கடந்தவாரம் சென்னயில் நடந்தது.
பெண் இயக்குனர் என்பதால் வெவ்வேறு துறையில் சாதனை செய்த பெண்களை முன்னிறுத்தி நிகழ்ச்சியை நடத்தினார்கள். அதில் குஷ்பூவும் ஒருவர்.
சாமி சிலை அருகில் செருப்பு காலோடு அலட்டலாக உட்கார்ந்து கடவுளை அவமானப்படுத்திவிட்டார் என்று இரண்டு பேர் கோர்ட் படியேறிவிட்டார்கள்.
குஷ்புவிடம் கேட்டால், நான் வடக்கில் பிறந்து வளர்ந்தவளாக இருந்தாலும் கல்யாணம் பண்ணி தமிழ் பெண்ணாகவே வாழ்ந்து கொண்டிருப்பவள் எனக்கு தெரியாதா...அப்படி யாரையும் புண்படுத்திற மாதிரி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கிறேன் என்கிறார்.
இது பண்பு!