மூன்று படங்களில் ஒளிப்பதிவாளர்...நான்காவது படத்தில் இயக்குனர் என்று புரமோசன் வாங்கியவர் ஜீவன்.
கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி இயக்குனர்கள் பலரிடம் ஸ்டில் போட்டோகிராபராக இருந்தவர்.
பிரகாஷ்ராஜின் டூயட் மூவிஸ் தயாரிப்பில் மயிலு படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார். பொதுவாக முதல் பட இயக்குனர்களின் ஃபாவரைட் சப்ஜெக்ட்டான காதல்தான் மயிலு கதையும்.
முற்றிலும் புதுமுகங்களை வைத்து இயக்கியிருக்கும் இந்தப் படத்திலும் கிளைமாக்ஸில் கதாநாயகி இறந்துபோகிறார். அது தொடர்பான காட்சிகளை உசிலம்பட்டிக்கு அருகில் படமாக்கியிருக்கிறார்கள்.
காற்றில் கலந்ததடி கண்ணம்மா...என்று சேது படத்தில் பாடியமாதிரி இதிலும் உயிரைக்கொடுத்து உருகவைத்திருக்கிறார் இசைஞாணி.
அந்தக் காட்சியை படமாக்கும் போது கிராமத்து மக்கள் நிஜமாகவே அழுதுவிட்டார்களாம். இதைக்கேள்விப்பட்ட பிரகாஷ்ராஜ்...நீ ஜெயிச்சிட்டடா என்று பாராட்டியிருக்கிறார்.