Entertainment Film Featuresorarticles 0711 29 1071129011_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மிருக‌ம் பட எ‌ன்.எ‌ஸ்.‌சி. உ‌ரிமை வா‌ங்‌கிய...

Advertiesment
தயாரிப்பாளர் சங்கத்தின் பெருந்தன்மை! மிருக‌ம் பட எ‌ன்.எ‌ஸ்.‌சி. உ‌ரிமை வா‌ங்‌கிய...
, வியாழன், 29 நவம்பர் 2007 (11:53 IST)
மிருக‌ம் பட எ‌ன்.எ‌ஸ்.‌சி. உ‌ரிமை வா‌ங்‌கிய...

மிருக‌ம் பட ‌ட்ரெ‌யிலரை‌ப் பா‌ர்‌த்த தயா‌ரி‌ப்பாள‌ர் ச‌ங்க‌த் தலைவரே அ‌ப்பட‌த்‌தி‌ன் எ‌ன்.எ‌ஸ்.‌சி. உ‌‌ரிமையை வாங்கிவிட்டார்.

கடந்த பதினேழாம் தேதி மிருகம் படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டுவிழா நடந்தது. அதை பிரமாண்டமாக செய்ததாலோ என்னவோ.. ஆடியோ கேசெட் வெளியீட்டு விழாவை படு சிம்ப்பிளாக ஆதித்யா ஹோட்டலில் நடத்தினார்கள்.

ஆனால் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து தலைவர், துணைத்தலைவர், பொருளாலர் என முக்கிய ஆட்களை சிறப்பு விருந்தினர்களாக அழைத்திருந்தார்கள்.

விழா தொடங்குவதற்கு முன்பு படத்தின் பாடல்காட்சிகளும் ட்ரெயிலரும் போட்டு‌க்காட்டப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக பேசவந்த தலைவர்...ரொம்ப கஷ்டப்பட்டு படத்தை எடுத்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது எனத்தொடங்கி...போகிறபோக்கில் பத்மப்ரியா விவகாரத்தில் சாமிக்கு போடப்பட்ட தடை, படம் ரிலீஸூக்கு பிறகு சரியாகிவிடும் என்று சொல்லிவிட்டு போனார்.

இதில் ஹை லைட்டான விசயம்...அடுத்த நாளே மிருகம் படத்தின் என்.எஸ்.சி உரிமையை அதிக விலைகொடுத்து தலைவரே வாங்கிவிட்டார் என்பதுதான்!

Share this Story:

Follow Webdunia tamil