ஒவ்வொரு படமும் ரிலீஸாவதற்கு முன்பு பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார் அஜித்.
பில்லா படம் வரும் டிசம்பர் 14 ரிலீஸாக இருக்கிறதாம். அதை முன்னிட்டு பத்திரிகையாளர்களை பார்க் ஹோட்டலில் சந்திக்கிறார்.
பில்லா படம் நன்றாக வந்திருப்பதால் உற்சாகமாக இருக்கும் அஜித் தன் மனைவி ஷாலினி குழந்தை பெறும் நாளை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.
தன் குழந்தை வரும் நேரம் உச்சத்தை அடைவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் அஜித்.