தசாவதாரம் படத்தின் பிரம்மாண்டம்
, திங்கள், 26 நவம்பர் 2007 (11:21 IST)
தசாவதாரம் படத்தின் பிரம்மாண்டம் பற்றி நாளுக்கு நாள் செய்தி வந்து கொண்டே இருக்கிறது. க்ளைமாக்ஸ் காட்சியில் எட்டு கமல் இடம்பெறுகிறார்களாம். இதற்காக கம்பியூட்டர் கிராஃபிக்ஸ் வேலைகள் நிறைய இடம்பெறுகிறதாம். அதோடு படத்தில் அஸின் டூயல் ரோல். கமலுடன் கட்டி புரண்டு சண்டைபோடுகிறாராம்.
ஒரு காட்சியில் கமல் பிச்சாவரம் ஆற்றில் குதிப்பது மாதிரி எடுத்துவிட்டு அதே காட்சியை கடலில் வருவது போல் மேட்ச் செய்கிறார்களாம். இந்த கிராஃபிக்ஸ் வேலைகளுக்கெல்லாம் எக்கச்சக்கமான செலவு செய்கிறார்களாம். இப்படியே போனால் பட்ஜெட் நூறுகோடியைத் தாண்டும் என்கிறார்கள்.