தீபாவளிக்கு வெளியான படங்களில் பொல்லாதவன் படம்தான் மிகப்பெரிய ஹிட் என்று ஏகமனதாக எல்லாரும் சொல்லிவிட்டார்கள்.
இயக்குனர் வெற்றிமாறனுக்கு முதல் பட வாய்ப்புக்கொடுத்த தயாரிப்பாளர் கதிரேசன், எனக்குதான் இரண்டாவது படத்தையும் இயக்கித் தர வேண்டும் என்று இயக்குனருக்கு நெருக்கடி கொடுத்துக்கொண்டிருக்கிறார்.
இது தவிர ஏகப்பட்ட கம்பெனிகளிடமிருந்தும் அழைப்பு வந்துவிட்டது. இயக்குனர் இரண்டாவது படத்தை தணுஷை ஹீரோவாக வைத்துதான் இயக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
இப்படியான நிலையில் கதிரேசனுக்கு தேதி கொடுப்பதாக சொல்லியிருக்கிறாராம் சிம்பு. முக்கோண காதல் கதை மாதிரி சூடுபிக்கத் தொடங்கியிருக்கிறது ஆட்டம்!