பிரிவோம் சந்திப்போம் படத்தில் பாடல்களை அணி இலக்கணப்படி கவிஞர் யுகபாரதியை எழுதச்சொல்லி
வாங்கியிருக்கிறார் இயக்குனர் கரு.பழனியப்பன்.
இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி, மூணார் மற்றும் கொடைக்கானல் ஆகிய இடங்களில் நடந்து வந்தன.
இப்போது படப்பிடிப்புக் குழுவினர் ஆந்திராவில் வாராங்கல் என்னும் இடத்திற்கு
போயிருக்கிறார்கள். இது நக்சலைட்டுகள் வாழும் இடமாம். அது வறண்ட பூமியாம்.
ஆனால் படத்தில் வரும் ஒரு பாடலுக்கு அந்த லொக்கேஷன் ரொம்ப முக்கியம் என்பதால் அங்கே படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.