Publish Date: Tue, 06 Nov 2007 (12:12 IST)
Updated Date: Tue, 06 Nov 2007 (12:12 IST)
கதை சரியில்லை, கதாபாத்திரம் தனக்கு பொருந்துமா என்ற குழப்பத்தில் வில் படத்தில் நடிப்பதா வேண்டாமா என்று தயங்கிக் கொண்டிருந்தார் எஸ்.ஜே.சூர்யா.
இதனால் படம் ஆரம்பிக்க போகும் சமயத்தில் நிறுத்தப்பட்டது. இப்போது தெளிவாக இந்த படத்தில் நடிக்கலாம் என்று முடிவு செய்து தயாரிப்பாளரிடம்
சொல்லி இருக்கிறார் சூர்யா.
படம் மீண்டும் புத்துயிர் பெற்று தொடங்க இருக்கிறது. நாணில் செலுத்தப்பட்ட வில்லை போல படப்பிடிப்புக்கான ஆயத்த வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன.
இதனால் நிம்மதி பெருமூச்சுடன் இருக்கிறார் படத்தின் இயக்குனர் பிரபாகர் தீபாவளி முடிந்து 9 தேதி வில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இந்த படத்திற்காக நீண்ட முடியை வளர்த்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.