மலைக்கோட்டை படம் நினைத்த மாதிரி நன்றாக போகாததால் அப்செட்டாக இருக்கிறாராம் விஷால். ஓவர் கமர்ஷியலாக இருந்தால் படம் வெற்றியடையாமல் போக வாய்ப்பிருக்கிறது என்பதை இதன் மூலம் கற்றுக்கொண்டாராம்.
எவ்வளவு பெரிய இயக்குனராக இருந்தாலும் நல்ல கதை இருந்தால்தான் நடிப்பது என்று முடிவுக்கு வந்திருக்கிறாராம்.
இப்போது நடித்துக் கொண்டிருக்கும் சத்யம் படத்தில் சில மாற்றங்களைச் செய்து சிறப்பாக நடித்து வருகிறாராம். ஒரு தோல்வி எவ்வளவு பாடங்களை கற்றுக்கொடுக்கிறது!