வில்லன் கெட்டப்பில் மிரட்டும் பிரசன்னா
, சனி, 3 நவம்பர் 2007 (10:36 IST)
மிஷ்கின் இயக்கும் அஞ்சாதே படத்தில் நரேன், பிரசன்னா என்று இரண்டு கதாநாயகர்கள் நடித்து வருவது தெரிந்த விசயம். படத்தின் கதையை ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் நல்லவனாக இருக்கும் ஒருவன் சந்தர்ப்பவசத்தால் கெட்டவனாவதும், கெட்டவனாக இருக்கும் ஒருவன் நல்லவனாவதும்தான் கதையாம்.
படத்தில் ஆரம்பத்தில் கெட்டவனாக இருக்கும் நரேன் நல்லவனாகிறார். நல்லவனாக இருக்கும் பிரசன்னா
கெட்டவனாகிறார்.
இதில் அதிகம் ஸ்கோர் பண்ணப்போவது பிரசன்னாதான் என்கிறார்கள். கெட்டப் மாற்றி வித்தியாசமாக வில்லன் நடிப்பில் கலக்கிக் கொண்டிருக்கிறாராம்.ோ