Publish Date: Wed, 31 Oct 2007 (12:27 IST)
Updated Date: Wed, 31 Oct 2007 (12:27 IST)
கண்ணாமூச்சி ஏனடா படத்தில் ஹீரோவுக்கு அப்பாவாக நடிக்கிறார் சத்யராஜ்.
ஆனால் தான் கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கு இன்னும் மார்க்கெட் குறையாததால் இனிமேல் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறாராம் சத்யராஜ்.
ஹீரோவுக்கு அப்பா அல்லது ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரம் என்று யாராவது
சத்யராஜிடம் கதை சொல்ல போனால் ஒரு காபியை கொடுத்து அப்படியே போயிட்டு வாங்க என்று அனுப்பிவிடுகிறாராம்.
இன்னும் கொஞ்ச காலத்திற்கு கதாநாயனாக மட்டும்தான் நடிப்பேன் என்ற புது முடிவில் இருக்கிறாராம். நீங்களே கதாநாயகனாக நடித்துக்கொண்டிருந்தால் உங்க மகன் முன்னணி கதாநாயகனாவது எப்போது?