நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிக்கும் படத்தில் நடிப்பதற்காக நீண்ட முடியை வளர்த்துக் கொண்டிருக்கிறார் எஸ்.ஜே. சூர்யா.
ஆனால் கதை சரியில்லை, இயக்குனரை மாற்ற வேண்டும் என்ற பல பிரச்னைகளால் அந்த
புராஜெக்ட் இப்போதைக்கு நடக்காது போலிருக்கிறது. பேசாமல் படத்தை இயக்க கிளம்பிவிடலாம் என்று முடிவெடுத்திருக்கிறார் சூர்யா.
ஆஸ்கார் ரவிச்சந்திரனை பார்த்து கதையை சொல்லியிருக்கிறார். அவருக்கு கதை பிடித்து போகவே படத்தை தயாரிக்கிறேன் என்றிருக்கிறாராம்.
அதில் கதாநாயகனாக நடிக்கப்போவது யார் என்றுதான் தெரியவில்லை. நிச்சயம் எஸ்.ஜே.சூர்யா இல்லை.