Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

5 சர்வதேச விருதுகளை வென்ற 'நதி' குறுத்திரைப்படம்!

Advertiesment
5 சர்வதேச விருதுகளை வென்ற 'நதி' குறுத்திரைப்படம்!

Webdunia

, வியாழன், 1 நவம்பர் 2007 (15:32 IST)
5 சர்வதேச விருதுகளை வென்ற 'நதி' குறுத்திரைப்படம்!

பிரா‌ன்‌சி‌ல் வாழு‌ம் இல‌‌ங்கையை சே‌ர்‌ந்த பா‌ஸ்கர‌ன் எ‌ன்ற த‌மிழ‌ர் இயக்கிய நதி என்ற குறுந்திரைப்படம் 5 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது.

சுயாதீன திரைப்பட நிறுவனம் நடத்திய 6வது சர்வதேச குறும்பட விருது வழங்கும் விழா கனடாவில் நடைபெற்றது.

இவ்விழாவில், சிங்கப்பூர், மலேசியா, லண்டன், இலங்கை, இந்தியா, டென்மார்க், கனடா, ஈரான் போன்ற நாடுகளிலிருந்து சுமார் 150 படங்கள் பங்கேற்றன.

இதில் பாரீஸைச் சேர்ந்த பாஸ்கர் இயக்கிய 'நதி' என்ற தமிழ் குறுந்திரைப்படம் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த எழுத்தாளர், சிறந்த ஒளிப்பதிவாளர் என 5 விருதுகளை வென்றுள்ளது. இந்த விழாவில் அதிகபட்சமாக 5 விருதுகளை வென்ற படம் இது ஒன்றே என்பது குறிப்பிடத்தக்கது.

நதி குறுந்திரைப்படத்திற்கான சிறந்த படம், நடிகர், இயக்குநர், எழுத்தாளர் என 4 விருதுகளையும் பாஸ்கர் பெற்றார். சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை லண்டனில் வசிக்கும் ஈஸ்வர் என்பவர் பெற்றார்.

நதி திரைப்பட கலைஞர்கள் அனைவரையும் விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற அனைவரும் பாராட்டி வாழ்த்தினர்.

Share this Story:

Follow Webdunia tamil