வித்தியாசமாக விளம்பரம் தேடும் பிரிவோம் சந்திப்போம்
, செவ்வாய், 30 அக்டோபர் 2007 (12:59 IST)
ராமேஸ்வரம் படத்தின் ஆடியோ ரிலீஸை வித்தியாசமாக சன் ஸ்டூடியோவில் நடத்தினார்கள். அதைப்போன்று பிரிவோம் சந்திப்போம் படத்தின் ஆடியோ ரிலீஸையும் வித்தியாசமாக வெளியிட இருக்கிறார்கள்.
வழக்கமாக சென்னையில்தான் ஒலிநாடா வெளியீட்டுவிழாவை நடத்துவார்கள். பிரிவோம் சந்திப்போம் குழுவினர் கோயம்புத்தூரில் விழாவை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.
இப்படம் பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கிறது. முதல் காட்சியை பார்க்கும் முதல் ஐந்து லட்சம் ரசிகர்களுக்கு காலண்டர் பரிசாக கொடுக்கப்போகிறார்களாம். எப்படியாவது படத்தை விளம்பரப்படுத்த
வேண்டும்!