இம்மாதம் படப்பிடிப்பு நடப்பதாக இருந்த தெனாவெட்டு படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தள்ளிபோகிறது.
இப்படத்தை தயாரிக்கும் ஈ.எல்.கே நிறுவனத்தினர்தான் புலிவருது படத்தையும் தயாரிக்கிறார்கள். முந்தைய படங்களின் நஷ்டம் மற்றும் புலிவருது பிஸினெஸ் டல்லாக இருப்பது என்ற பல காரணங்களால் நிதிநெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.
இதனால் உடனடியாக தெனாவெட்டு படப்பிடிப்பை நடத்த முடியவில்லை. படத்தின் ஹீரோ ஜீவாவுக்கு நவம்பர் 21 திருமணம் நடக்க இருக்கிறது.
திருமணம்,வரவேற்பு,ஹனிமூன் என்று ஜீவா நவம்பர், டிசம்பர் முழுக்க பிஸியாகிவிடுவார். அடுத்து ஜனவரியில்தான் தெனாவெட்டு படப்பிடிப்பு நடக்கும் என்கிறார்கள்.