Publish Date: Tue, 30 Oct 2007 (12:50 IST)
Updated Date: Tue, 30 Oct 2007 (12:50 IST)
காளை படம் முடிந்ததும் கெட்டவன் படத்தில் நடிக்கலாம் என்ற முடிவில் இருந்தார் சிம்பு. ஆனால் அந்த படம் பிரச்னையில் இருப்பதால் சிலம்பாட்டம் படத்தில் நடிக்கத் திட்டமிட்டிருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் சரவணன் இயக்கும் படம் இது. லட்சுமி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறார்கள். இரண்டு நாள்களுக்கு முன் இப்படத்தின் ஆபிஸ் பூஜை போடப்பட்டது.
மீதமிருக்கும் காளை படப்பிடிப்பு முடிந்ததும் சிலம்பாட்டத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது.
நவம்பர் 12 லிருந்து படப்பிடிப்பை நடத்தப்போகிறார்களாம்.
கெட்டவன் படத்தை ஆஸ்கார் மூவிஸ் அண்டர்டேக் செய்ய பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. அதன்பின்தான் அப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிடப்படும்.