Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிக‌‌ர் ஜா‌ன் ஆ‌பிரகா‌ம் முய‌‌ற்‌சி ப‌லி‌க்குமா?

Advertiesment
நடிக‌‌ர் ஜா‌ன் ஆ‌பிரகா‌ம் முய‌‌ற்‌சி ப‌லி‌க்குமா?

Webdunia

, சனி, 27 அக்டோபர் 2007 (15:09 IST)
இடைவெளி இல்லாமல் தொடர்ந்து புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்ட ஒருவர் அதனை விடுவது தொடர்பாக எடுக்கப்பட்ட திரைப்படட்ம ரசிகாகள் இடையே எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

அதே நேரத்தில் எப்போது நாம் சந்திப்போம் என்ற திரைப்படம் ரசிகாகள் அமோக வரவேற்பை பெற்று வசூலில் சக்கைப் போடு போட்டுக் கொண்டு இருக்கிறது.

நோ ஸ்மோக்கிங் என்ற திரைப்படத்தில் பணக்கார வியாபாரி ஒருவர் தொடர்ந்து புகைப்பதால் அவரது மனைவி அவரை விவகாரத்து செய்வதாக மிரட்டுகிறார்.

இதனால் உடனடியாக புகைப்பதை நிறுத்த அதற்கான மையங்களை நாடாமல், புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட ஆலோசனை வழங்கும் பாபா பெங்காலி என்பவரை நாடுகிறார் அந்த வியாபாரி.

படத்தில் வியாபாரியாக பிரபல இந்தி நடிகா ஜான் ஆபிரகாமும், மனைவியாக பிபாஷா பாசுவும் நடித்துள்ளனர்.

இந்த படம் வெளியான முதல் ஒரு வாரத்தில் சரியான வரவேற்பு இல்லை, இதற்கிடையே இந்தோரில் 1 லட்சம் மாணவர்களுடன் புகைப்பழக்கத்திற்கு எதிர்க ஜான் ஆபிரகாம் எடுத்துக் கொண்ட உறுதி மொழி எந்த அளவுக்கு இந்தப் படத்தின் வெற்றிக்கு உதவி செய்யும் என்று தெரியவில்லை.

நாட்டையே புகைப்பிடிக்காத மண்டலமாக மாற்ற விருப்பம் என்று ஆபிரகாம் எடுத்த திடீர் ஸ்டண்டால் நோ ஸ்மோக்கிங் படத்தின் வெற்றிக்கு எந்த வகையில் உதவும் என்பது இன்னும் சில நாட்களில் தான் தெரியவரும்.

இதே நேரத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் படம் எப்போது நாம் சந்திப்போம் (when we met). ஷாகித் கபூர், கரீனா கபூர் நடித்துள்ள இப்படம் கனவு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் இளம்பெண் எப்படி காதல் வலையில் விழுகிறாள் என்பதும் அது தொடர்பான நிகழ்வுகளாகும்,

ஒரே நேரத்தில் வெளியான இரண்டு திரைப்படங்களின் போக்கு எதைக் காட்டுகிறதென்றால் யதார்த்த கதைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் திரைப்படங்களை ரசிகர்கள் எப்போதுமே அங்கீகரிக்க மறுத்ததில்லை. நடிகர்கள் எவ்வளவு புகழ்பெற்றவர்களாக இருந்தாலும் திரைப்படங்களின் வெற்றி தோல்வியை அவர்களால் நிர்ணயிக்க முடியாது என்பதுதான், கதைக்கு முக்கியத்துவம் கொடுத்தால் வெற்றியும் நிச்சயம்.


Share this Story:

Follow Webdunia tamil