தமிழ் சினிமாவுக்கு கெட்டப் மற்றும் இரட்டை வேடக் காட்சிகள் பிடித்திருக்கிறது போல. கமலில் ஆரம்பித்து பரத், ஜீவா, ஆர்யா, சிம்பு, எஸ்.ஜே.சூர்யா என்று ஆளாளுக்கு கெட்டப்பை மாற்றி நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
விஜய், அஜீத், சூர்யா மூவரும் சொல்லி வைத்தார்போல ஆளுக்கொரு படத்தில் இரட்டை வேட காட்சிகளில் நடிக்கிறார்கள்.
அஜீத் பில்லாவில் இரண்டு வேடத்தில் நடிக்கிறார். வேல் படத்தில் இரண்டு சூர்யாக்கள். அதேபோல் அழகிய தமிழ்மகன் படத்தில் விஜய்க்கு இரட்டை வேடம்.