Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இ‌ய‌க்குன‌ர் சா‌மி‌க்கு ஒரு வரு‌டம் தடை!

Advertiesment
இ‌ய‌க்குன‌ர் சா‌மி‌க்கு ஒரு வரு‌டம் தடை!

Webdunia

, செவ்வாய், 16 அக்டோபர் 2007 (10:51 IST)
நடிகை பத்மப்ரியாவை க‌ன்ன‌த்த‌ி‌ல் அடித்த இய‌‌க்குன‌ர் சா‌மி‌, தமிழ் படங்கள் உள்பட தென்னிந்திய மொழி படங்கள் எதையும் ஒரு வருடம் இய‌க்க கூடாது எ‌ன்று தடை விதி‌க்க‌ப்ப‌‌ட்டு‌ள்ளது.

இய‌க்குன‌ர் சாமி இயக்கி வந்த `மிருகம்' என்ற படத்தில், பத்மப்ரியா கதாநாயகியாக நடித்து வந்தார். இந்த படத்தின் `கிளைமாக்ஸ்' (உச்சக்கட்ட காட்சி), மதுரையை அடுத்த குறண்டி என்ற கிராமத்தில் படமாக்கப்பட்டபோது, இய‌க்குன‌ர் சாமி, பத்மப்ரியாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தா‌ர்.

இதையடு‌த்து இ‌ய‌க்குன‌ர் சாமி மீது தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் சங்கம், திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) ஆகிய அமைப்புகளிடம் பத்மப்ரியா புகார் செய்தார்.

இந்த புகார் பற்றி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நேற்று இரவு விசாரணை நடந்தது. இய‌க்குன‌ர் சாமியும், நடிகை பத்மப்ரியா ஆ‌கியோ‌ரிட‌ம் ‌விசாரணை நடத்தப்பட்டது. அ‌ப்போது அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் தர‌ப்பு ‌‌நியா‌ய‌த்தை கூ‌றின‌ர்.

இதையடு‌த்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் துணைத்தலைவர் அன்பாலயா பிரபாகரன் கூறுகை‌யி‌ல், நடிகை பத்மப்ரியாவை கன்னத்தில் அடித்ததற்காக, இய‌க்குன‌ர் சாமி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். இன்னும் ஒரு வருடத்துக்கு, இய‌க்குன‌ர் சாமிக்கு `பெப்சி,' தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் ஆகிய இரு அமைப்பினரும் எந்த வித ஒத்துழைப்பும் தருவதில்லை என்று முடிவு செய்து இருக்கிறோம் எ‌ன்றா‌ர்.

தமிழ் படங்கள் உள்பட தென்னிந்திய மொழி படங்கள் எதையும் ஒரு வருடத்துக்கு சாமி டைர‌க்‌‌டு செய்ய தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. `மிருகம்' படத்தின் தயாரிப்பாளரின் நலன் கருதி, இந்த படத்தை மட்டும் சாமி முடித்து தரலாம் என்று அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது எ‌ன்று அன்பாலயா பிரபாகரன் கூறினார்.

இந்த பிரச்சினை பற்றி நடிகர் சங்க துணைத்தலைவர் விஜயகுமார் கூறுகை‌யி‌ல், எங்கள் தலைவர் சரத்குமார் இப்போது வெளியூரில் இருக்கிறார். அவர் சென்னை திரும்பியதும், நடிகர் சங்கம் கூடிப்பேசி இதுபற்றி ஒரு முடிவுக்கு வருவோம் எ‌ன்றா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil