பசுபதியுடன் ஜோடி சேர மறுத்த கதாநாயகி
, வியாழன், 4 அக்டோபர் 2007 (13:14 IST)
ஜெகன் இயக்கத்தில் சேரன், பசுபதி ஆகியோர் நடிக்கும் படம் ராமன் தேடிய சீதை. இப்படத்தில் சேரனுக்கு கதாநாயகியாக மும்பை அல்லது கல்கத்தாவைச் சேர்ந்த புதுமுக நடிகையை ஒப்பந்தம் செய்யப்போகிறார்கள்.
பசுபதி ஜோடியாக பத்மப்ரியாவை கேட்டிருக்கிறார்கள். என்னை பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? பசுபதிக்கு ஜோடியாக நடிக்க வேற ஆளைப் பாருங்கள் என்று கோபத்தோடு கத்திவிட்டாராம்.
பசுபதிக்கு ஜோடியாக யாரைப் ஒப்பந்தம் செய்யலாம் என்று தீவிரமாக யோசித்து வருகிறாராம் இயக்குனர். அநேகமாக அவரும் புதுமுகமாக இருக்கலாம் என்கிறார்கள்.