தமிழ் எம்.ஏ என்ற தலைப்பில் எம்.ஏ என்பது ஆங்கில வார்த்தை என்பதால் அரசு வரிவிலக்கு கிடைக்காது என்று கற்றது தமிழ் என்று மாற்றி வைத்தது தெரிந்த விசயம்.
இதனால் கற்றது தமிழ் என்ற பெயரிலேயே சென்சாரும் வாங்கிவிட்டார்கள். கடந்த 30-ம் தேதி தயாரிப்பாளர் சங்கத்தில் வழக்கமான சங்க சந்திப்பு நடந்திருக்கிறது. அதில் படத்தின் தலைப்பு பற்றி பேச்சு எழுந்த போது தமிழ் எம்.ஏ என்ற பெயரை ஆங்கில பெயராக கருதவேண்டியதில்லை.
தமிழ் பெயராகவே கருதலாம். இதனால் வரிவிலக்கு ரத்து செய்யப்படாது என்றிருக்கிறார்கள். ஐய்யையோ அவசரபட்டு கற்றது தமிழ் என்ற பெயரில் சென்சார் வாங்கிவிட்டோமே என்று வருத்தப்பட்டிருக்கிறார்கள் தமிழ் எம்.ஏ படக்குழுவினர்.