பில்லா படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அஜீத் நமிதா நடித்துக் கொண்டிருக்கிறார்களாம்.
நயன்தாராவை வைத்து ஒரு பாடல் காட்சியை எடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால் நயன்தாராவின் கால்ஷீட் கிடைத்தபாடில்லை.
இப்படியே கால்ஷீட் தராமல் இழுத்துக்கொண்டு போனால் வேறு ஒரு திட்டத்தை கைவசம் வைத்திருக்கிறார்கள் படக்குழுவினர். நயன்தாராவிற்கு பதிலாக வேறு ஒரு பாப்புலர் கதாநாயகியை அப்பாடலுக்கு ஆடவைத்துவிடலாம் என்று முடிவு எடுத்திருக்கிறாராம் இயக்குனர் விஷ்ணுவர்த்தன்.