அப்பா படத்தில் மகள் பாடும் பாடல்
, வியாழன், 27 செப்டம்பர் 2007 (11:44 IST)
தசாவதாரம் படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் இடம்பெறுகிறதாம். இந்தியில் பெரிய இசையமைப்பாளராக இருக்கும் கிமேஷ் இப்படத்திற்கு இசை அமைக்கிறார்.
இவர்தான் பொம்மலாட்டம் படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். இசையில் மேற்படிப்பு படித்திருக்கும் கமலின் மகள் ஸ்ருதி தசாவதாரம் படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறாராம்.
படத்தில் மொத்தம் ஐந்து பாடல்களை காட்சிபடுத்திவிட்டார்களாம். இன்னும் ஒரு பாடல்தான் பாக்கியிருக்கிறதாம். நவம்பரில் ஆடியோவை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.