பிரிவோம் சந்திப்போம் முடித்த கையோடு, சொந்தப் படத்தை எடுக்கத் திட்டமிட்டிருக்கிறார் சேரன். அது
குடும்பக் கதை என்பதில் எந்த மாற்றமுமில்லை.
ஆனால், எது என்பது தான் புதிராக இருந்து வந்தது. அதற்கு இப்போது விடை கிடைத்துள்ளது. தனது டிரீம் தியேட்டர்ஸ் சார்பில், பாகப்பிரிவினை என்ற படத்தை எடுக்கிறார்.
தீவிர சிவாஜி அபிமானியான சேரன், இப்போது முதன்முறையாக சிவாஜி படத்தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளார். சூப்பர்குட் மற்றும் மோஸர் பியர் தயாரிப்பு நிறுவனங்களில் நடித்துக்கொண்டே இந்தப்படத்தை இயக்கவும் திட்டமிட்டிருக்கிறார்.
மேலும், மோஸர் பியர் நிறுவனத் தயாரிப்பில் சேரன் நடிக்கும் படத்துக்கு தற்காலிகமாக வைக்கப்பட்டிருக்கும் பெயர் ராமன் தேடிய சீதை என்ற எம்ஜிஆர் பட டைட்டில்.