Publish Date: Wed, 26 Sep 2007 (12:08 IST)
Updated Date: Wed, 26 Sep 2007 (12:04 IST)
வேல் படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் நடந்து கொண்டிருந்தது. சில இண்டோர் காட்சிகளை சென்னையில் எடுத்தார்கள்.
அதில் வடிவேலு நடிக்கும் காட்சிகள் படமாக்கி கொண்டிருக்கின்றனர். நேற்று படப்பிடிப்புக்கு வந்த வடிவேல் கொஞ்ச நேரத்திலேயே உடம்பு சரியில்லை என்று சொல்லி கிளம்பி போய்விட்டாராம்.
அவர் திடீரென்று கிளம்பி போனதால் உடனடியாக திட்டமிட்டு வேறு காட்சிகளையும் எடுக்க முடியவில்லையாம்.
இதனால் படப்பிடிப்பை பேக்கப் செய்திருக்கிறார்கள். ஏற்கனவே வடிவேல் இப்படி படப்பிடிப்பில் மக்கர் செய்ய விஷயத்தை கவுன்சில் வரை கொண்டுபோனார் இயக்குனர் ஹரி.