Publish Date: Mon, 24 Sep 2007 (12:06 IST)
Updated Date: Mon, 24 Sep 2007 (12:06 IST)
சிவாஜி படத்தை மிகப்பிரமாண்டமாக அதிக பட்ஜெட்டில் இயக்கினார் ஷங்கர். ஒரு கோடிக்கு மேல் செலவு செய்து ஒரு பாடல் காட்சியை எடுத்தார். அதுவே தன்னுடைய தயாரிப்பு என்று வரும்போது பட்ஜெட்டை இறுக்கிப்பிடுக்கிறாராம்.
அறை எண் 305 ல் கடவுள் படத்தின் பட்ஜெட் இரண்டரை கோடியாம். அதற்கு மேல் ஒரு பைசா அதிகரிக்க கூடாது என்று திட்டவட்டமாக படத்தின் இயக்குனர் சிம்புதேவனிடம் சொல்லிவிட்டாராம்.
இவருக்கு இது இரண்டாவது படமாக இருந்தாலும் முதல் பட இயக்குனரைப்போல பயந்து பயந்து படப்பிடிப்பிற்கு தேவையான விசயங்களை சொல்கிறாராம்.