மலைக்கோட்டை படத்தில் வில்லனாக நடித்துக் கொண்டிருந்த ஆஷிஸ் வித்யார்த்தி காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தெரியும்.
முதன்முறையாக இவர் காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பதால் எப்படி
இருக்குமோ என்று எல்லோரும் கொஞ்சம் சந்தேகத்தோடு இருந்தார்களாம்.
படம் ரெடியாகி இம்மாதம் ரிலீஸாக தயாராக இருக்கிறது. இந்நிலையில் படம் பார்த்த அனைவரும் ஆஷிஸ் வித்யார்த்தியின் காமெடியை
ஆகா ஓகோவென்று புகழ்கிறார்களாம்.
இனி யாரும் வித்யார்த்தியை வில்லனாக நடிக்க கூப்பிடமாட்டார்களாம், நகைச்சுவை கதாபாத்திரத்திற்குத்தான் கூப்பிடுவார்களாம். அந்த அளவிற்கு
காமெடியில் வடிவேலு, விவேக்கை எல்லாம் மிஞ்சியிருக்கிறாராம்.