ஜீவன் நடித்த நான் அவனில்லை பட வெற்றிக்கு பிறகு கோடம்பாக்கத்தில் அவர் மவுசு கூடிவிட்டது.
ஏற்கனவே அவர் செல்வா இயக்கத்தில் நடித்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்த தோட்டா படத்தை தூசி தட்டி மறுபடியும் எடுக்க அதன் தயாரிப்பாளர் கிளம்பிவிட்டார்.
ஜீவன் மச்சக்காரன் படத்தில் பிஸி என்று சொல்ல பிரச்னை கவுன்சில் வரை போனது. மச்சக்காரன் முடிந்ததும் தோட்டா படத்தை முடித்தபின்தான் வேறு படத்திற்கு போகவேண்டும் என்று ஜீவனிடம் கவுன்சிலில் சொல்லிவிட்டார்கள்.
அதைமீறி ஜீவன் பயணிகன் கவனிக்கவும் என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். மறுபடியும் தோட்டா தயாரிப்பாளர் சங்கத்தில் பஞ்சாயத்து வைத்து ஜீவனை தோட்டா படத்தில் நடிக்க அழைத்து வந்துவிட்டார்.
படத்தின் கதாநாயகி பிரியாமணி மற்றும் ஜீவனை வைத்து ஃப்ரஷாக ஒரு ஃபோட்டோ செஷனை நடத்தியிருக்கிறார்கள் தோட்டா படக்குழுவினர். வருகிற 24 ம் தேதியிலிருந்து தோட்டா படத்தின் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.