பள்ளிக்கூடம் படம் எல்லோருக்கும் தங்கள் பள்ளிக்கூட வாழ்க்கையை ஞாபகபடுத்தும் என்று தங்கர்பச்சான் சொன்னார்.
பள்ளிக்கூடம் படத்தின் படப்பிடிப்பு நடந்த பண்ரூட்டி பக்கம்தான் சிநேகாவின் சொந்த ஊர் இருக்கிறது. இவர் வளர்ந்தது சார்ஜாவில், முதன் முதலாக பள்ளிக்கு போனது பண்ரூட்டியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில்தானாம்.
இந்தப் படத்தில் நடித்த போது தன்னுடைய குழந்தை பருவ வாழ்க்கை நினைவில் வந்து சிநேகாவை நெகிழ்ச்சி கொள்ளச் செய்ததாம்.