பாதுகாப்பாக ஒதுங்கிக் கொள்ளும் சேரன்!
, திங்கள், 10 செப்டம்பர் 2007 (19:41 IST)
பிரிவோம் சந்திப்போம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சேரன் அடுத்து உடனடியாக எந்த படத்தில் நடிப்பது என்ற குழப்பத்தில் இருக்கிறாராம். மாயக்கண்ணாடி படம் ஓடவில்லை என்றாலும் தமிழில் ஹீரோக்கள் பஞ்சம் இருப்பதால் சேரனுக்கு நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகிறது. இதில் சூப்பர் குட் பிலீம்ஸ், மோசர் பியர் ஆகிய கம்பெனிகளில் வேறு இயக்குனர்கள் இயக்கத்தில் நடிக்கப் போகிறார். ஞானம் ஃபிலீம்ஸ் மற்றும் எல்.எல்.எம். நிறுவனத்தில் நடித்து இயக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இயக்கி நடிப்பதை விட வேறு இயக்குனர்கள் இயக்கத்தில் நடித்தால் கொஞ்சம் பாதுகாப்பாக ஒதுங்கிக் கொள்ளலாம் என்பதால் முதலில் நடிக்கப் போகிறாராம்.