நடிகர் ஸ்ரீகாந்த்- வந்தனா திருமணம் சென்னையில் இன்று நடைபெற்றது.
யநடிகர் ஸ்ரீகாந்த்- வந்தனா திருமணம் சென்னை தாஜ்கோரமண்டல் ஓட்டலில் இன்று காலை 6 மணிக்கு நடந்தது. ஸ்ரீகாந்த் பட்டு வேட்டியும் சட்டையும் உடுத்தியிருந்தார். அரக்கு கலரில் பூப்போட்ட சேலை அணிந்திருந்தார் வந்தனா.
புரோகிதர்கள் மந்திரம் சொல்ல வந்தனா கழுத்தில் ஸ்ரீகாந்த் தாலி கட்டினார். அப்போது கூடியிருந்தவர்கள் மலர் தூவி வாழ்த்தினார்கள்.
எளிமையாக நடந்த இந்த திருமணத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், நடிகைகள் ராதிகா, சோனியா அகர்வால் ஆகியோர் நேரில் மணமக்களை வாழ்த்தினார்கள்.
இன்று மாலை அடையார் பார்க் ஓட்டலில் நடக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர்-நடிகைகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்கள்.