Publish Date: Fri, 07 Sep 2007 (12:32 IST)
Updated Date: Fri, 07 Sep 2007 (12:31 IST)
விஜய் நடிக்கும் அழகிய தமிழ்மகன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து கடைசியாக ஹைதராபாத்தில் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியை 15 நாள் எடுத்தார்கள்.
பெப்ஸி விஜயன் தலைமையில் இக்காட்சி படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு முடிந்து சென்னைக்கு திரும்பினர். ஆனால் நினைத்த மாதிரி காட்சி வரவில்லையாம்.
அதனால் மீண்டும் அந்த காட்சியை படம்பிடிக்கபோகிறார்கள். மறுபடியும் ஹைதராபாத் சென்று ஐந்து நாள்கள் படப்பிடிப்பு நடத்த கிளம்பி போயிருக்கிறார்கள் அழகிய தமிழ்மகன் படக்குழுவினர்.