குருவி படத்திலிருந்து நயன்தாரா நீக்கம், ஒப்பந்தமான த்ரிஷா
குருவி படத்தில் நயன்தாரா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு அட்வான்ஸூம் வாங்கிவிட்டார்.
தற்போது அவர் படத்திலிருந்து தூக்கப்பட்டு த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது பரபரப்பான செய்தியாகிவிட்டது.
விஷாலுடன் ஜோடி சேர்ந்து த்ரிஷா நடிக்கப் போகிறார் என்று செய்தி வெளியான பிறகு விஜய், த்ரிஷா நட்பில் விரிசல் ஏற்பட்டது. பின்பு விஷால் படத்தில் த்ரிஷா நடிக்காததால் விஜய் சமாதானமானார்.
ஆனால் இருவருக்குமிடையே ஏதோ ஈகோ ஏற்பட குருவி படத்தில் நயன்தாராவை ஒப்பந்தம் செய்தார்கள். ஆரம்பத்திலிருந்தே த்ரிஷாதான் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் தரணி அடம்பிடித்தார். விஜய் மறுத்து வந்தார்.
கடைசியில் த்ரிஷாவை ஒப்பந்தம் செய்து ஃபோட்டோ ஷாட்டும் பண்ணியிருக்கிறார்கள்.
இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை.