நடிகர் சங்கத் தலைவர் பதவியை நடிகர் சரத்குமார் ராஜினாமா செய்துள்ளார். இந்த தகவலை பொதுச் செயலாளர் ராதாரவி தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக பதவி வகித்து வரும் ஆர்.சரத்குமார் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள கட்சிக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்பியுள்ளதாக ராதாரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவருடைய ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதா அல்லது நிராகரிப்பதா என்பதை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழுதான் முடிவெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து முடிவெடுக்க தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் வரும் 9ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடைபெறும் என ராதாரவி கூறியுள்ளார்.